/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் பாலத்தில் கட்டுமான பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துார் பாலத்தில் கட்டுமான பொருட்கள்
ஸ்ரீவில்லிபுத்துார் பாலத்தில் கட்டுமான பொருட்கள்
ஸ்ரீவில்லிபுத்துார் பாலத்தில் கட்டுமான பொருட்கள்
ஸ்ரீவில்லிபுத்துார் பாலத்தில் கட்டுமான பொருட்கள்
ADDED : ஜூலை 19, 2024 06:17 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மாதாங்கோயில் தெரு பாலத்தில் கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
நகரின் அனைத்து பகுதியிலும் நாளுக்கு நாள் தெருக்கள் முதல் பஜார் வீதிகள் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் ரோட்டின் வளைவு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் இடையூறு இல்லாமல் நடந்து செல்லவோ, டூவீலரில் செல்லவோ முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் ஒரு காலத்தில் பஸ் போக்குவரத்து இருந்த மேலரத வீதி, மாதாங் கோயில் தெரு, ராஜாஜி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோட்டில் தற்போது எளிதாக ஆட்டோக்கள் கூட வர முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் மாதாங் கோயில் தெரு பாலத்தில் ஜல்லி கற்கள், மணல் குவியல்கள் அடிக்கடி கொட்டப்பட்டு, பாலத்தை அடைத்துக் கொண்டு இருப்பதால் எளிதில் மக்கள் வந்து செல்ல முடியாமலும், டூவீலர்கள் முதல் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது.
எனவே, பாலத்தின் வழியாக வாகனங்கள் சிரமமின்றி செல்லும் சூழலை ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து, காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.