ரோட்டில் வழிந்து ஓடும் கழிவு நீர்
ரோட்டில் வழிந்து ஓடும் கழிவு நீர்
ரோட்டில் வழிந்து ஓடும் கழிவு நீர்
ADDED : ஜூலை 19, 2024 06:17 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வாறுகால் அடைப்பால் கழிவுநீர் ரோட்டில் வழிந்து ஓடுவதால் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நாடார் மேல ரத வீதியில் வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தேங்கும் கழிவு நீர் வெளியேற முடியாமல் ரோட்டில் விடப்படுகிறது. இந்த ரோடு வழியாகத்தான் பள்ளிகள் கல்லூரிகள் கோயில்களுக்கு மக்கள் வந்து செல்வர்.
கழிவு நீர் ஓடுவதால் இதில் நடந்து கோயிலுக்கு செல்ல பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். கழிவுநீரை மாற்று வழியில் கொண்டு செல்ல நகராட்சி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பல நாட்களாக இந்த பிரச்சனை இருப்பதாக இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.
கால்வாய் பணிகள் முடிவடைந்த பின்னும் அடைப்பை எடுத்துவிட்டு கழிவுநீர் சீராக செல்லும் வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகிறது என மக்கள் புகார் கூறுகின்றனர்.