/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நுண்கதிர் பிரிவு ஊழியர்கள் பணி நேர உயர்வுக்கு எதிர்ப்பு நுண்கதிர் பிரிவு ஊழியர்கள் பணி நேர உயர்வுக்கு எதிர்ப்பு
நுண்கதிர் பிரிவு ஊழியர்கள் பணி நேர உயர்வுக்கு எதிர்ப்பு
நுண்கதிர் பிரிவு ஊழியர்கள் பணி நேர உயர்வுக்கு எதிர்ப்பு
நுண்கதிர் பிரிவு ஊழியர்கள் பணி நேர உயர்வுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:59 AM
விருதுநகர்:தமிழக அரசு மருத்துவமனைகளில் நுண்கதிர் பிரிவு ஊழியர்களின் பணி நேரம் 5:30 மணியில் இருந்து 8:00 மணி நேரமாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் ஞானதம்பி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரேடியோலாஜிகல் பிரிவில் 750 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில் நுண்கதிர் பிரிவு ஊழியர்களின் பணி நேரம் 5:30 மணியில் இருந்து 8:00 மணி நேரமாக உயர்த்தியிருப்பதாக ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தெரிவித்து வந்த நிலையில் அதை மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆணையாக வெளியிட்டுள்ளார்.
இதற்கான விளக்கமாக தற்போது நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதனால் பணி நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இது தவிர பணி முடிந்தாலும் அழைப்பு பணியும் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நுண்கதிர் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் 36 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. மேலும் கதிரியக்க அளவீடு கருவி பொருத்தி பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்காக விடுப்பு வழங்கப்படுகிறது. இதை அறிந்தும் ஊழியர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்தகட்டமாக ஊழியர்களுக்கான ஓராண்டில் ஒரு மாதம் விடுப்பு என்பதை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நுண்கதிர் ஊழியர்களின் பணி நேரத்தை 5:30 மணியில் இருந்து 8:00 மணி நேரமாக உயர்த்தியை ரத்து செய்து, புதிய நிரந்தர பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், துறை செயலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்து உள்ளோம் என்றார்.