Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'அடித்தது' ஆயிரம் பவுன் 'முடித்தது' ரூ.4 கோடி மில் முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

'அடித்தது' ஆயிரம் பவுன் 'முடித்தது' ரூ.4 கோடி மில் முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

'அடித்தது' ஆயிரம் பவுன் 'முடித்தது' ரூ.4 கோடி மில் முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

'அடித்தது' ஆயிரம் பவுன் 'முடித்தது' ரூ.4 கோடி மில் முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

ADDED : ஜூன் 20, 2024 02:55 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம்:மதுரை, விருதுநகர், கோயம்புத்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் முகமூடி அணிந்து 1000 பவுன் வரை கொள்ளையடித்த சம்பவத்தில் 5 பேரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர். கொள்ளை பணத்தில் ராஜபாளையத்தில் ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில்லை வாங்கி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் துடியலுார், சிங்காநல்லுார், சாய்பாபா காலனி, மதுரை மாவட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை, செக்கானுாரணி, உசிலம்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் முகமூடி அணிந்த மர்ம நபர் தனி ஒருவனாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை 1000 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த வழக்கறிஞருக்கு படித்துள்ள அருண்குமார் 23, ஆடிட்டருக்கு படித்துள்ள சுரேஷ்குமார் 26, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களுடைய பேக்கில் முகமூடி திருடன் பயன்படுத்தும் உடைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரம் பகுதியில் மசாஜ் சென்டர் உரிமையாளர் வீட்டில் கணவன், மனைவியை கட்டி போட்டு 54 பவுன் கொள்ளை அடித்தது தெரிந்தது.

இதில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் முகமூடி திருடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், தற்போது மதுரை கருப்பாயூரணியில் வசிப்பதும், அங்கிருந்து விருதுநகர், மதுரை, கோவை மாவட்டங்களில் கொள்ளை அடிக்க சென்று வருவதும் தெரிய வந்துள்ளது. தன்னுடைய நடமாட்டத்தை போலீசார் கண்டறிந்து விடக்கூடாது என்பதற்காக மூர்த்தி அலைபேசியை பயன்படுத்துவதில்லை, கொள்ளையடித்து விட்டு வரும்போது உடையை மாற்றிக் கொள்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை பெண்களை வைத்து பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளையடிப்பதும் நடந்துள்ளது. இக்கொள்ளையில் எட்டு பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 பவுன் நகைகள் கொள்ளை அடித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், அதில் கிடைத்த பணத்தில் ராஜபாளையத்தில் ஸ்பின்னிங் மில்லை ரூ.4 கோடிக்கு வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மூர்த்தியின் தாயார் சீனித்தாய் 53, மனைவி அனிதா 29, உறவினர் நாகஜோதி 25, உள்ளிட்ட 5 பேரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us