ADDED : ஜூன் 20, 2024 04:05 AM
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்ட மூர்த்தி 34, இவர் எம். ரெட்டியபட்டியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் மற்றும் குழாய்கள் பதிக்கும் கான்டிராக்டராக உள்ளார்.
இவரிடம் அருப்புக்கோட்டை குலசேகர நல்லூரை சேர்ந்த திருப்பதி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரிடம் மணிகண்ட மூர்த்தி வாகனங்களுக்கு எரிபொருள் ஊற்றுவதற்காக செட்டில் உள்ள டீசலை எடுத்து வர அனுப்பி உள்ளார்.
பல மணி நேரமாகயும் திருப்பதி வராததால் அங்கு சென்று பார்த்துள்ளார். செட்டில் இருந்த 70 லிட்டர் டீசல் கேன், 110 மீட்டர் பைப் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.