ADDED : ஜூலை 13, 2024 07:05 AM
விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி நடந்தது.
கல்லுாரி பேரவை தலைவர் அமுதா வரவேற்றார். முதல்வர் சிந்தனா முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:
மாணவர்கள் கல்லூரியில் நன்கு படிப்பதன் மூலம் உங்களின் அறிவு பெருகும். அறியாமை என்ற இருள் போகும். புது சிந்தனைகள் உருவாகும். எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாத ஏதேனும் பிரச்னைகள் வரும்போது, அதனை எதிர்கொள்வதற்கு தேவையான அறிவையும் மனமுதிர்ச்சியும், இந்த கல்லூரி பருவம் பெற்று தரும்.
முன்னேறுவதற்கு மிக எளிய வாய்ப்பு கல்வியும், கடும் உழைப்பும் ஆகும். கல்வியும், கடும் உழைப்பும் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் இந்த சமூகத்தில் நடக்கக்கூடிய வாய்ப்புகள், சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு, என்றார். மாணவி ஹர்ஷிதா நன்றி கூறினார்.