/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் காலை நேர வாகன தணிக்கையால் பயணிகள் சிரமம் கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் காலை நேர வாகன தணிக்கையால் பயணிகள் சிரமம்
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் காலை நேர வாகன தணிக்கையால் பயணிகள் சிரமம்
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் காலை நேர வாகன தணிக்கையால் பயணிகள் சிரமம்
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் காலை நேர வாகன தணிக்கையால் பயணிகள் சிரமம்
ADDED : ஜூலை 13, 2024 07:04 AM
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக ஜங்ஷனில்காலை நேரங்களில் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்வதாலும், வாகனங்கள் சர்வீஸ்ரோட்டை அணிவகுத்து நிற்பதால் பஸ் ஏற காத்திருப்போர் சிரமப்படுகின்றனர்.
விருதுநகர் கலெக்டர்அலுவலக ஜங்ஷனில் காலை நேரங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் அதன் அதிகாரிகள் வாகன தணிக்கை செய்கின்றனர். அதிக லோடு, கரும்புகை உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கின்றனர்.
இந்த தணிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், கலெக்டர் அலுவலக சந்திப்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசலான ஒன்று. ஏற்கனவே இங்கு பாலம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் காலை நேரங்களில் சென்னையில் இருந்து வரும் ஆம்னி பஸ்களும், கனரக லாரிகள், ட்ரக்குகள் அதிகம் வருகின்றன. இந்நிலையில் இந்நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் அங்கு பஸ் ஏற நிற்கும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
வழக்கமாக வட்டார போக்குவரத்து துறையினர் விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலையில் வைத்து ஆய்வு செய்வர். இப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பிலே செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே வாகன தணிக்கை பணியை வழக்கம் போல் எம்.ஜி.ஆர்., சாலை பகுதியில் செய்ய முன்வர வேண்டும்.