/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்
மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்
மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்
மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்
ADDED : ஜூன் 21, 2024 03:43 AM
திருச்சுழி: திருச்சுழி பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் செய்தி குறிப்பு : திருச்சுழி பகுதியில் ஒரே பயிரை தொடர்ந்து பயிர் செய்வதாலும் மண்ணில் உள்ள சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை பயிரிடுவதாலும் மண்ணின் வளம் குறைந்து விடுகிறது.
அதிக அளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்துவதாலும் மண்வளம் குறைகிறது. இவற்றை தடுக்கும் வகையில் விவசாயிகள் பசுந்தாள் உர விதைகளை பயன்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் மண்ணில் உள்ள கரிமச்சத்துக்கள் அதிகரிக்கும். பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும். பசுந்தாள் உர விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு நகல், அலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். என கூறியுள்ளார்.