/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டிராக்டர் மோதி பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை டிராக்டர் மோதி பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
டிராக்டர் மோதி பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
டிராக்டர் மோதி பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
டிராக்டர் மோதி பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 21, 2024 03:43 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் மோதி ராஜேஸ்வரி பலியான சம்பவத்தில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி தாலுகா வன்னியம்பட்டியை சேர்ந்தவர் ஜோதிராம்,40. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி,37, பயர் ஒர்க்ஸ் தொழிலாளி.
இருவரும் 2021 ஆக.,17 காலை 9:00 மணிக்கு ஒரு டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்துள்ளனர். அப்போது நொச்சி குளம் விலக்கு அருகே எதிரே வந்த டிராக்டர் மோதியதில் ராஜேஸ்வரி உயிரிழந்தார். ஜோதிராம் காயமடைந்தார்.
மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தை சேர்ந்த சமுத்திரக்கனி,50, என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.