/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணி
தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணி
தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணி
தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணி
ADDED : ஜூன் 18, 2024 06:47 AM

சிவகாசி : சிவகாசி அருகே விளாம்பட்டி ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயில் ஆழப்படுத்தும் பணியினை மேற்கொண்டு பெண்கள் முன்மாதிரியாக திகழ்கின்றனர்.
மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும்தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுதல், ஓடையை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பெரும்பாலும்புற்களை அகற்றுதல் போன்ற பணிகள் சம்பிரதாயத்திறகு நடைபெறும். ஆனால் விளாம்பட்டி ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் அங்குள்ள கண்மாயினை ஆழப்படுத்தும் பணியினை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீர் ஆதாரமாகவும் பயன்படும். முன்மாதிரியாக இப்பணியினை மேற்கொண்டுள்ளதால் இப் பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
கார்த்தீஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவர்: இங்குஉள்ள கண்மாய் குடிநீர் ஆதாரத்திற்கு மட்டுமின்றி விவசாயத்திற்கு பயன்படுகிறது. இதனை ஆழப் படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களிடம் கூறவும் அவர்களும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். அதன்படி கண்மாய் நடுவே அரை ஏக்கர் பரப்பளவில் நான்கடிக்கு ஆழமாக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.