விருதுநகர் : விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திருநெல்வேலியில்ஜாதி மறுப்பு திருமணம்செய்து வைத்ததற்காக கம்யூ., கட்சி அலுவலகத்தை தாக்கியதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநில குழு உறுப்பினர் சுகந்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.