/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணம் பறிப்பு பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணம் பறிப்பு
பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணம் பறிப்பு
பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணம் பறிப்பு
பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணம் பறிப்பு
ADDED : ஜூன் 07, 2024 04:39 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே திருமணமான பெண்ணை ஏமாற்றி 10 பவுன், 7 லட்சம் பணத்தை பறித்ததுடன் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் பவானி, 33, இவருக்கும் அருப்புக்கோட்டை தம்மாந்தெருவை சேர்ந்த தனசேகரனுக்கும் 2009 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் குடியிருந்த வீட்டின் மாடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சபரிநாதன் குடியிருந்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து பவானியின் கணவர் விவாகரத்து வாங்கிச் சென்று விட்டார். இந்நிலையில் பவானியை திருமணம் செய்வதாய் செய்வதாக கூறி சபரிநாதன் 7 லட்சம் பணம், 10 பவுன் நகை வாங்கியுள்ளார். திருமணம் செய்வதில் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து பவானி கேட்ட போது, சபரிநாதன் பவானியுடன் தனிமையில் இருந்த வீடியோவை பவானியின் தம்பி பொன்ராஜுக்கும் தந்தை பூமிநாதனுக்கும் அனுப்பி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பவானி எஸ்.பி., யிடம் புகார் செய்தார். எஸ்.பி., யின் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சபரிநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.