/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி., அரசு கலைக் கல்லுாரியில் 280 சீட்களுக்கு 4 ஆயிரம் விண்ணப்பம் ஸ்ரீவி., அரசு கலைக் கல்லுாரியில் 280 சீட்களுக்கு 4 ஆயிரம் விண்ணப்பம்
ஸ்ரீவி., அரசு கலைக் கல்லுாரியில் 280 சீட்களுக்கு 4 ஆயிரம் விண்ணப்பம்
ஸ்ரீவி., அரசு கலைக் கல்லுாரியில் 280 சீட்களுக்கு 4 ஆயிரம் விண்ணப்பம்
ஸ்ரீவி., அரசு கலைக் கல்லுாரியில் 280 சீட்களுக்கு 4 ஆயிரம் விண்ணப்பம்
ADDED : ஜூன் 07, 2024 04:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் 280 இடங்களுக்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் என 5 பாடப் பிரிவுகளில் 280 மாணவர்கள் படிக்க முடியும்.
கடந்த ஆண்டு வரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வாடகை கட்டடத்தில் இயங்கியபோது, மூன்றாம் ஆண்டு வரை 900 மாணவர்கள் வரை படித்தனர். தற்போது பிள்ளையார் குளம் ரோட்டில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை துவங்கிய நிலையில், 280 இடங்களுக்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விளையாட்டு பிரிவில் கவுன்சிலிங் முடிந்து 10 பேர் சேர்ந்துள்ளனர்.
ஜூன் 10, 11,12 தேதிகளில் கவுன்சிலிங் நடக்கவுள்ள நிலையில் 270 மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டு இடங்கள் நிரப்பப்படும் நிலை உள்ளது.
இதனால் இடம் கிடைக்காத 3 ஆயிரத்து 700 மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..