Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

ADDED : ஜூன் 07, 2024 04:40 AM


Google News
சாத்துார்: சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை , அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் ராஜீ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷாதேவி வரவேற்றார். 50 மரக்கன்றுகள் வளாகத்தில் நடப்பட்டது.விழாவில் பேராசிரியர்கள் மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

*கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கினர். தொடர்ந்து ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டனர். என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று சுற்றுச்சூழல் விழிப்புனர் ஏற்படுத்தினர்.

கல்லுாரி இயக்குனர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாசன் முருகவேல் வரவேற்றார். நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ் குமார், லதா மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

*விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை சார்பில் செண்பகத்தோப்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தலைமை குற்றவியல் நீதிபதி பிரித்தா மரக்கன்றுகளை நட்டு வனத்தை பாதுகாப்பது குறித்து பேசினார். மேலும் சூழல் அங்காடி மையத்தை திறந்து வைத்தார். விழாவில் வனத்துறையினர், மலைவாழ் மக்கள், தன்னார்லர்கள் பங்கேற்றனர்.

*சிவகாசி பகுதியில் பசுமை விருதுநகர் இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், விருதுநகர், சிவகாசி ஆலமரம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

சிவகாசி வடமலாபுரம் செக் போஸ்ட் அருகே 400 மரக்கன்றுகள், ஆனையூரில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. கலெக்டர் கூறுகையில், இதுபோன்று தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என்றார். திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி இயக்குனர் விசாலாட்சி, கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* கல்லம நாயக்கன்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பொறுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷினி தலைமை வகித்தார். டாக்டர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் கோகிலா தேவி, செவிலியர் கண்காணிப்பாளர் சித்ரா தேவி வரவேற்றனர். மாவட்ட மருத்துவம் ,ஊரக நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். சீனியர் கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

*அருப்புக்கோட்டை அருகே வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட மகாகனி மரங்கள் நடப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் தலைமை வகித்தார். இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருத்தான நில சீரழிவு, பாலைவனமாதல், வறட்சியை தாங்கும் தன்மை, சமாளிக்கும் யுக்திகள் பற்றி கூறினார். 2 ஆண்டுகளில் 200 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர். பேராசிரியர்கள் கண்ணன் மண்வள பாதுகாப்பு குறித்தும், இணை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் மரங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்ணன், பாலாஜி உலக சுற்றுச்சூழல் தினம் அவசியத்தை பற்றி விளக்கினர். பரளச்சி கிராமத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஜீவா 30 பூவரசு மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

----* திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த உடையனம்பட்டி ஊராட்சியில் கிரீன் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். எஸ்.பி.எம்., அறக்கட்டளை தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்திற்கான மரக்கன்றுகள் நடப்பட்டது. ஜனசக்கி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், வக்கீல்கள் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார், மனித பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் முனீஸ்வரன், செயலாளர் பிரின்ஸ் கலந்து கொண்டனர்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us