/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியிலிருந்து திருச்செந்துார் ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு காரியாபட்டியிலிருந்து திருச்செந்துார் ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியிலிருந்து திருச்செந்துார் ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியிலிருந்து திருச்செந்துார் ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியிலிருந்து திருச்செந்துார் ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 21, 2024 04:22 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர், ராமேஸ்வரம், ராஜபாளையம் ஊர்களுக்கு பஸ் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியை சுற்றி 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் தினமும் திருச்செந்துாருக்கு சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய நேரத்திற்கு பஸ் வசதி கிடையாது. காரியாபட்டி நான்குவழிச்சாலையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. எப்போதாவது ஒரு சில பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். மற்ற நேரங்களில் அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தான் திருச்செந்தூருக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டி இருக்கிறது.
அதேபோல் ராமேஸ்வரத்திற்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்க, சாமி தரிசனம் செய்ய அடிக்கடி சென்று வருகின்றனர். மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தான் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. வீண் அலைச்சல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் வழியாக ராமேஸ்வரத்திற்கு நேரடியாக பஸ் வசதி செய்ய வேண்டும். தொடர்ந்து ராஜபாளையம், சிவகாசிக்கு வியாபார நோக்கத்திற்காகவும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசிப்பதற்காகவும் ஏராளமானவர்கள் இப்பகுதியில் இருந்து சென்று வருகின்றனர். இவர்களும் விருதுநகர், மதுரை சென்று பஸ்கள் மாறி செல்ல வேண்டி இருப்பதால் நேரம், பணம் விரையம் ஆகிறது.
ஒரு நாள் முழுக்க வீணாவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரியாபட்டியில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக பஸ் இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதனால் இந்த மூன்று வழித்தடங்களில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.