/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நர்சரி உரிமையாளர்களுக்கு விதிகளை பின்பற்ற அறிவுரை நர்சரி உரிமையாளர்களுக்கு விதிகளை பின்பற்ற அறிவுரை
நர்சரி உரிமையாளர்களுக்கு விதிகளை பின்பற்ற அறிவுரை
நர்சரி உரிமையாளர்களுக்கு விதிகளை பின்பற்ற அறிவுரை
நர்சரி உரிமையாளர்களுக்கு விதிகளை பின்பற்ற அறிவுரை
ADDED : ஜூலை 21, 2024 04:22 AM
விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா செய்திக்குறிப்பு: நாற்றங்காலில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழமரக்கன்றுகள், தென்னைங்கன்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மை தன்மை அட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும்.
அதில் நாற்றங்கால் உரிமையாளரின் கையொப்பத்துடன் முத்திரை எண், பயிரின் பெயர், ரகத்தின் பெயர், பதியம் செய்த நாள், குவியல் எண், கன்று எண் ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். பழமரங்களை போல் குழித்தட்டுகளில் விற்பனை செய்யப்படும் காய்கறி பயிர்களின் நாற்றங்காலின் தரத்தையும், ஆதாரத்தையும் உறுதி செய்ய அந்த குழித்தட்டுகளில் பயிரின் ரகம், வீரிய ரகங்களின் விதை, அனைத்து முக்கிய தகவல்களையும் உள்ளடக்கிய உண்மை தன்மை அட்டை பொருத்தி இருப்பதை விற்பனை முன் உறுதி செய்ய வேண்டும். நடைமுறைகளை பின்பற்றாத நாற்றங்கால் உரிமையாளர்கள் மீது விதைகள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.