ADDED : ஜூலை 21, 2024 04:22 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் என்.சி.சி., சார்பாக, விபத்தில்லா சாலை பயணம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் விபத்து ஏற்படாமல் ரோடுகளில் பயணிப்பது சாலை விதிகள் உட்பட விளக்கினார்.
எஸ்.ஐ., முருகன், முதல்வர் செல்லத்தாய், உதவி செயலர் தங்க குமார் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜீ நன்றி கூறினார்.