/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 03, 2024 02:40 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அதிகாலை முதல் திருமுறை பாராயணம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது. இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் பிரதான யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, யாத்திரதானம், கும்பங்கள் புறப்பாடு நடந்தது.
இதையடுத்து காலை 7:50 மணிக்கு ரகுபட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்பாள், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், தருமபுரம் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. மான்ராஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் வளர்மதி, புலவர் பாலகிருஷ்ணன், சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில் மண்டகபடிதாரர்கள் சங்க தலைவர் வைரமுத்து, துணைத் தலைவர் சேகரன், செயலாளர் யுவராஜ், பொருளாளர் விஸ்வநாதன், உறுப்பினர் மூர்த்தி, சிவாச்சாரியார்கள், பங்கேற்றனர்.
திருநீறு தயாரிக்கும் சிவனடியார்கள் குழுவினர் பக்தர்களுக்கு 12 மணி நேரம் அன்னதானம் வழங்கினர். 2006க்கு பின் 18 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
ஏற்பாடுகளை தக்கார் லட்சுமணன், செயல் அலுவலர் முத்து மணிகண்டன், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.