விருதுநகர்: பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நகரச் செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, முத்துக்குமார், விஜயமுருகன், லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.