விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் விருதுநகர் மண்டலச் செயலாளர் ஜெயராஜ், கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் முத்துமணி, பாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.