ADDED : ஜூலை 22, 2024 04:15 AM
சாத்துார்: சாத்துார் அண்ணா நகர் பகுதியில் ஜூலை 19 இரவு 11:15 மணிக்கு எஸ்.எஸ்.ஐ.முருகன் தலைமையில் தலைமை காவலர் ஸ்ரீனிவாசன் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்தசத்திரப்பட்டி மதன்குமார், காளிஸ்வரன், சாத்துார் நந்தகுமார் ஆகியோரிடம் தலைமைக் காவலர் வண்டி ஆவணங்களை கேட்டபோது மூவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.