ADDED : ஜூன் 21, 2024 03:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர் ரேவதியை 40, வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 7:30 மணியளவில் ரேவதி தனது அலுவலகத்தில் இருந்தபோது சிலர் அவரது அலுவலகத்தில் புகுந்து கத்தியால் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க முயன்ற போது அவரது இரு கைகளிலும் வெட்டு காயம் விழுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.