/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மருத்துவக் கழிவுகள் ரோட்டில் சிதறல் மருத்துவக் கழிவுகள் ரோட்டில் சிதறல்
மருத்துவக் கழிவுகள் ரோட்டில் சிதறல்
மருத்துவக் கழிவுகள் ரோட்டில் சிதறல்
மருத்துவக் கழிவுகள் ரோட்டில் சிதறல்
ADDED : ஜூன் 21, 2024 03:53 AM

விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் திறந்த வெளி வாகனத்தில் எடுத்துச் சென்ற மருத்துவக்கழிவுகள் ரோட்டில் சிதறியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் பகுதியில் சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகள் திறந்த வெளி வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவது தொடர் கதையாக உள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மருத்துவக் கழிவுகள் மூடிய நிலையில் உள்ள வாகனத்தில் கொண்டு செல்லப்படாததால் வழி நெடுகிலும் சிதறியது. இதில் ஊசி, ரத்தக்கறையுடன் பஞ்சு, மாஸ்க், பழைய துணிகள் இருந்தது.
இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லுாரியில் இருந்து சென்ற மாணவர்கள் முகத்தை மூடியவாறு சென்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கழிவுகள் கொட்டியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை வாகனத்தின் டிரைவரிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் சென்றார்.
எனவே விருதுநகரில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளி வாகனங்களில் கொண்டுச் செல்லப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.