/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நரிக்குடியில் வாரச்சந்தைக்கு கட்டடம் நரிக்குடியில் வாரச்சந்தைக்கு கட்டடம்
நரிக்குடியில் வாரச்சந்தைக்கு கட்டடம்
நரிக்குடியில் வாரச்சந்தைக்கு கட்டடம்
நரிக்குடியில் வாரச்சந்தைக்கு கட்டடம்
ADDED : ஜூலை 10, 2024 06:58 AM
நரிக்குடி, : நரிக்குடியில் ரோட்டோரத்தில் வாரச்சந்தை நடைபெறுவதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது. தனி இடம் ஒதுக்கி, வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்கு திருச்சுழி, பார்த்திபனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நரிக்குடி வந்து தான் செல்ல வேண்டும். காய்கறி வாங்குவதற்கு கூட வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். நரிக்குடியில் காய்கறி வாரச்சந்தை துவக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.
இதனை ஏற்று சில மாதங்களுக்கு முன் வாரச்சந்தை துவக்கப்பட்டு, வியாழன் தோறும் நடைபெறுகிறது. இட வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் அருகே முத்தனேரி செல்லும் ரோட்டில் கடைகளை விரிக்கின்றனர். காய்கறி வாங்க மக்கள் கூடுவதால் இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள், டூவீலர் செல்ல முடியவில்லை. மாற்று வழியும் கிடையாது.
அடிக்கடி வாகனங்கள் வந்து செல்லும் ரோடாக இருப்பதால், நிதானமாக நின்று பொருட்கள் வாங்க முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆத்திர அவசரத்திற்கு வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
வாரச்சந்தையை தனி இடத்திற்கு மாற்ற வேண்டும். குறிப்பாக ஊராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் வணிக வளாகம் கட்டி வார சந்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.