/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 4 மாதத்தில் 55 அரசு பஸ்கள் கண்டம் புதிதாக 36 பஸ்கள் இயக்கம் 4 மாதத்தில் 55 அரசு பஸ்கள் கண்டம் புதிதாக 36 பஸ்கள் இயக்கம்
4 மாதத்தில் 55 அரசு பஸ்கள் கண்டம் புதிதாக 36 பஸ்கள் இயக்கம்
4 மாதத்தில் 55 அரசு பஸ்கள் கண்டம் புதிதாக 36 பஸ்கள் இயக்கம்
4 மாதத்தில் 55 அரசு பஸ்கள் கண்டம் புதிதாக 36 பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 10, 2024 06:58 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் முதல் ஜூன் வரை இயக்க தகுதியற்ற 55 அரசு பஸ்கள் கண்டம் செய்யப்பட்டு, புதிதாக 36 அரசு பஸ்கள் வழங்கப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை 69, விருதுநகர் 71, சிவகாசி 65, சாத்துார் 57, காரியாப்பட்டி 19, ஸ்ரீவில்லிப்புத்துார் 43, ராஜபாளையம் 1- - 48, ராஜபாளையம் 2 -- 30, வத்திராயிருப்பு 16 என மொத்தம் 418 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதில் பல அரசு பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்த பின்பும் முறையாக பராமரிக்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டது.
இந்தாண்டு இவற்றில் இயக்க தகுதியற்ற பஸ்களை தேர்வு செய்து கண்டம் செய்வதற்கான பணிகள் நடந்தது.
இந்த பணிகளில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இயக்க தகுதியற்ற 55 அரசு பஸ்கள் கண்டம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல புதிதாக வழங்கப்பட்ட 36 அரசு பஸ்கள் தேவைக்கேற்ப மாவட்டத்தில் உள்ள ஒன்பது அரசு பணிமனைகளுக்கும் ஒதுக்கப்பட்டது.
இவை அந்தந்த வழித்தடங்களில் தற்போது தொடர்ந்து இயக்கப்படுகிறது.
விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் துரைசாமி கூறியதாவது:
மாவட்டத்திற்கு கூடுதலாக 26 அரசு பஸ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளது.
மேலும் இயக்க தகுதியற்ற அரசு பஸ்களை கண்டம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
அதற்கு தகுந்தாற் போல புதிதாக அரசு பஸ்கள் வழங்கப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கப்படும், என்றார்.