/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்வாரியத்தினர் சீரமைத்த ரோட்டிற்கு விருதுநகர் நகராட்சி செப்பனிட்டதாக பில் மின்வாரியத்தினர் சீரமைத்த ரோட்டிற்கு விருதுநகர் நகராட்சி செப்பனிட்டதாக பில்
மின்வாரியத்தினர் சீரமைத்த ரோட்டிற்கு விருதுநகர் நகராட்சி செப்பனிட்டதாக பில்
மின்வாரியத்தினர் சீரமைத்த ரோட்டிற்கு விருதுநகர் நகராட்சி செப்பனிட்டதாக பில்
மின்வாரியத்தினர் சீரமைத்த ரோட்டிற்கு விருதுநகர் நகராட்சி செப்பனிட்டதாக பில்
ADDED : ஜூலை 18, 2024 04:50 AM
விருதுநகர் : விருதுநகர் சிவன் கோயில் தெருவில் சேதமடைந்த ரோடுகளை மின் வாரியத்தினர் சீரமைப்பு செய்தனர். ஆனால் நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டதாக பில் எழுதப்பட்டுஉள்ளது, என நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
விருதுநகர் நகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெரும்பாலான கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது.
விருதுநகரில் சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர்மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.
பால்பாண்டி, காங்.,: வங்கியில் கடன் பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கவில்லை.
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: நகராட்சியில் உள்ள 33 கடைகள், கோடவுன்களில் கட்டண வசூல் உள்ளிட்ட உரிம ஒப்பந்தத்தை ஏன் 3 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்தீர்கள்.
தாமிரபரணி குடிநீர் தற்போது ஓரளவு பிற வார்டுகளுக்கும் கிடைக்கிறது. முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர்கள் முத்துராமன், மதியழகன் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து மாதாந்திரகுடிநீர் கட்டணம் ரூ.110லிருந்து ரூ.150 ஆக உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, சிவகாசியில் குடிநீர் கட்டணம் வெறும் ரூ.50 தான். மாதம் 2 அல்லது 3 முறை மட்டும் குடிநீர் வழங்கி விட்டு ரூ.150ஆக கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல.
எனவே, இத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
ஹேமா, தி.மு.க.,: சிவன் கோயில் தெருவில் சேதமடைந்த ரோடுகளை மின் வாரியத்தினர் சீரமைப்பு செய்தனர். ஆனால் நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டதாக பில் எழுதப்பட்டுள்ளது.
மாதவன், நகராட்சிதலைவர்: இதுகுறித்து உடனே விசாரணை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.