/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மேல்நிலை குடிநீர் தொட்டி குழாயில் கயிறு கட்டி குடிநீர் ஏற்றி விநியோகம் ஊழியர்கள் அச்சம் மேல்நிலை குடிநீர் தொட்டி குழாயில் கயிறு கட்டி குடிநீர் ஏற்றி விநியோகம் ஊழியர்கள் அச்சம்
மேல்நிலை குடிநீர் தொட்டி குழாயில் கயிறு கட்டி குடிநீர் ஏற்றி விநியோகம் ஊழியர்கள் அச்சம்
மேல்நிலை குடிநீர் தொட்டி குழாயில் கயிறு கட்டி குடிநீர் ஏற்றி விநியோகம் ஊழியர்கள் அச்சம்
மேல்நிலை குடிநீர் தொட்டி குழாயில் கயிறு கட்டி குடிநீர் ஏற்றி விநியோகம் ஊழியர்கள் அச்சம்
ADDED : ஜூலை 18, 2024 04:52 AM

விருதுநகர் : விருதுநகர் கல்லுாரி ரோட்டில் நகராட்சியின் மேல்நிலை குடிநீர் தொட்டியின் குழாய்களில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக குடிநீர் ஏற்றுவதால் எப்போது விழும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விருதுநகருக்கு குடிநீரை விநியோகம் செய்வதற்காக கல்லுாரி ரோட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி அமைத்து பல ஆண்டுகளாகியும் பராமரிக்கப்படாததால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீரை ஏற்றும் குழாய்கள் இரும்பு கிளாம்ப் கொண்டு சுவற்றுடன் பொருத்தப்பட்டுஇருக்கும். ஆனால் இங்குஉள்ள குழாயில் கிளாம்ப் பொருத்தாமல் கயிற்றால் சுவற்றுடன் கட்டி வைத்துஉள்ளனர். இதே நிலை குழாய் முழுவதும் உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறை குடிநீர் ஏற்றும்போதும் அதிர்வு உண்டாகி குழாய் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்துடன் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.
இதற்கு எதிரே நகராட்சி கமிஷனர் குடியிருப்பு இருந்தும் மேல்நிலைக் குடிநீர் தொட்டி இந்த நிலையில் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மேல்நிலை குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.