ADDED : ஜூலை 18, 2024 04:50 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் அய்யர் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் குணம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர செயலாளர் அய்யாதுரை, மல்லாங்கிணர் நகரசெயலாளர் செல்வம், திருச்சுழி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், நரிக்குடி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.