ADDED : ஜூன் 06, 2024 05:27 AM
விருதுநகர் : விருதுநகரில் மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் விழிப்புணர்வு வாகனத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் துவக்கி வைத்தார்.
வட்ட பணிகள் குழு தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நீதிமன்ற ஊழிர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நீதிபதிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.
மீசலுார் சூலக்கரை, பட்டம்புதுார் காலனி, எட்ட நாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, பூசசாரிப்பட்டி, தடங்கம், ஆர்.ஆர்., நகர், தம்மநாயக்கன்பட்டி, கன்னிச்சேரி, அம்மாபட்டி கோவில் புலிகக்குத்தி, மணிப்பாறை பட்டி ஆகிய ஊர்களில் விழிப்புணர்வு வாகனத்தை கொண்டு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கினர். குமாரலிங்கபுரத்தில் நுாறு நாள் வேலை பார்க்கும் மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடந்தது.