/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்--: மக்கள் பாதிப்பு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்--: மக்கள் பாதிப்பு
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்--: மக்கள் பாதிப்பு
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்--: மக்கள் பாதிப்பு
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்--: மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2024 05:27 AM
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளான சேத்துார், சுந்தரராஜபுரம், தேவதானம், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் மாம்பழ சாகுபடி அதிகம். தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் சீசன் காலத்தில் விலை குறைவு ஏற்படும்.
இதன் காரணமாக பேராசை கொள்ளும் சில வியாபாரிகள் விளைச்சலுக்கு முன்பே மாங்காய்களை கொண்டு வந்து குடோன்களில் வைத்து ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை உண்பதால் வயிற்று போக்கு, வயிற்று வலி ,வாந்தி , தோல் ஒவ்வாமை போன்ற பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு செய்து விதிமுறை மீறும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.