/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை *இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை *இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை *இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை *இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை *இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 06, 2024 01:03 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ரூ. 2.70 லட்சம் கடன் வாங்கிய பிரச்னையில் தாய், மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு துாண்டியதாக இரு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே பாரைப்பட்டி திடீர் நகரைச் சேர்ந்தவர் அச்சு தொழிலாளி ஜெயச்சந்திரன் 51. இவரது மனைவி ஞானபிரகாசி 48. இவர்களுக்கு சர்மிளா 24, ஜெயசூர்யா 22, என்ற மகள், மகன் உள்ளனர். சர்மிளா முதுகலை பட்டம் பெற்று வீட்டில் இருந்து வந்தார். ஜெயசூர்யா ஓசூரில் வேலை பார்த்து வருகிறார். ஜெயச்சந்திரன் உடல் நலம் சரியில்லாத போது சிகிச்சைக்காகவும் அவரது மகளின் படிப்பு செலவிற்காகவும் வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் 54, என்பவரிடம் ரூ. 1.5 லட்சம் ராஜகுமாரி 65, என்பவரிடம் ரூ.50 ஆயிரம், குருவம்மாள் 62, என்பவரிடம் ரூ. 70 ஆயிரமும் கடனாக வாங்கி இருந்தார். நீண்ட நாட்கள் ஆன நிலையில் பணம் கொடுத்தவர்கள் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் குடும்பத்திலும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஞானப்பிரகாசி, சர்மிளா ஆகியோர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கிழக்கு போலீசார் தாய், மகள் தற்கொலைக்கு துாண்டியதாக ஆறுமுகம், ராஜகுமாரி, குருவம்மாளை கைது செய்தனர்.
திருத்தங்கலில் இதே கடன் பிரச்னையில் மே 23 ல் ஆசிரியர் தம்பதி தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே போல் கடன் பிரச்னையில் தாய், மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.