ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த ரயில் பயனாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெகந்நாத ராஜா முன்னிலை வகித்தார்.
மதுரை ரயில்வே கோட்ட கலந்தாய்வு குழு உறுப்பினர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் ராஜபாளையத்தில் இருந்து மெமு வகை புறநகர் ரயில்களை மதுரை, நெல்லை, கொல்லத்திற்கு இயக்க வேண்டும். முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை துவங்க வேண்டும்.சோழபுரம் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவும், கோவை, திருப்பூர் மாநகரங்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளர் விஜய் நன்றி கூறினார்.