/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குழாய் உடைந்து குடிநீர் வீண்: மக்கள் அதிருப்தி குழாய் உடைந்து குடிநீர் வீண்: மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து குடிநீர் வீண்: மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து குடிநீர் வீண்: மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து குடிநீர் வீண்: மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 03, 2024 02:27 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரயில்வே தண்டவாளம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மேல்நிலை நீர் துவக்க தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி ஆலமரத்துப்பட்டி ரோடு வழியாக குழாய் பதிக்கப்பட்டு இந்திரா காலனி எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ஆலமரத்துப்பட்டி ரோடு ரயில்வே தண்டவாளம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகின்றது. இதனால் அப்பகுதியினருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாதம் ஒருமுறை குடிநீர் செய்யப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களாகத் தான் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இது அனைவருக்கும் போதாத நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடனடியாக அப்பகுதியில் சேதம் அடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.