Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

ADDED : ஜூன் 03, 2024 02:28 AM


Google News
சர்ச்சில் பொருட்கள் திருட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை அருகில் தேவ மகிமை சர்ச் உள்ளது. இதில் பாஸ்டராக உஷா 60, உள்ளார். ஞாயிறு தோறும் ஆராதனை நடக்கும். மற்ற நாட்களில் பூட்டி இருக்கும். 3 நாட்களுக்கு முன்பு சர்ச்சின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த கணேசன் பாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிபயர், மின்விசிறி உட்பட பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

முட்டை வியாபாரி பலி

விருதுநகர்: ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா 42. இவர் தற்போது ஒ.கோவில்பட்டியில் வசித்து முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் டூவீலரில் மே 31 ல் வசூல் செய்து விட்டு இரவு விருதுநகர் - சிவகாசி ரோட்டில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிகள் மாயம்

சாத்துார்: சாத்துார் நீராவிபட்டியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மூத்த மகளான 18 வயது சிறுமி, மே 28ல் சடையம்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆபிசிற்கு வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிவகாசி: அனுப்பன்குளம் மயிலாடுதுறையைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு திரி, ஒருவர் கைது

விருதுநகர்: நாட்டார்மங்கலம் ரோடு சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் 50. இவர் வேனில் பட்டாசு மிஷின் திரிகள் பொருத்தப்பட்ட 6 இஞ்ச் குழாய் 30 சாட் 150 எண்ணம் அனுமதியின்றி எடுத்துச்சென்றதை ஆமத்துார் எஸ்.ஐ., தங்கேஸ்வரன் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us