/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முழுமை அடையாத கண்மாய், ஊருணி துார்வாரும் பணி முழுமை அடையாத கண்மாய், ஊருணி துார்வாரும் பணி
முழுமை அடையாத கண்மாய், ஊருணி துார்வாரும் பணி
முழுமை அடையாத கண்மாய், ஊருணி துார்வாரும் பணி
முழுமை அடையாத கண்மாய், ஊருணி துார்வாரும் பணி
ADDED : ஜூன் 16, 2024 04:32 AM

சிவகாசி: சிவகாசியில் மாநகராட்சி சார்பில் கண்மாய், ஊருணி போன்ற நீர் நிலைகளை துார் வாருவதற்கு ரூ. 4.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் நீர்நிலைகளை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொத்தமரத்து ஊருணியை துார்வாரி, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க 1.75 கோடி ஒதுக்கப்பட்டது.
நுாற்றாண்டு சிறப்பு நிதியில் இருந்து சிறுகுளம் கண்மாய் கரையில் நடைமேடை ரூ.1.10 கோடி ஒதுக்கப்பட்டது.
சிவகாசி பெரியகுளம் கண்மாயை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்த திட்டமிட்டு ரூ.4.6 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் வரும் தலைமுறைக்கு தண்ணீர் பிரச்னை, நிலத்தடி நீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் 2022 ல் துவங்கியும் 25 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சார்பில் மாநகராட்சி வழிகாட்டுதலில், 25 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்த பொத்தமரத்து ஊருணியை துார்வாரியது. ஆனால் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லவில்லை.
இதனால் சமீபத்தில் கோடை மழை பெய்தும் வீணாகிவிட்டது. மேலும் அதே சமூக ஆர்வலர்கள் சிறுகுளம், பெரியகுளம் கண்மாயை பருவமழைக்கு முன்பே தரமாக துார்வாரி கரைகளை பலப்படுத்தியது. மேலும் கரைகளில் பனைமர விதைகள் உள்ளிட்ட பல்வேறு செடிகள் நடப்பட்டது.
ஆனால் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுகுளம், பெரியகுளம் கண்மாய் நடைபாதை அமைக்கும் பணிகளும் முழுமையடையவில்லை.
தற்போது கண்மாய் கரைகளும் பலவீனப்பட்டு வருகின்றது.
மேலும் சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்ட அனைத்து செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு விட்டது. இதனால் சமூக ஆர்வலர்கள் விரக்தியில் உள்ளனர்.
எனவே சிறுகுளம், பெரியகுளம், பொத்தமரத்து ஊருணி மேம்பாட்டு திட்டங்களை துரிதப்படுத்தி செயல்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் தன்னார்வலர்கள், மக்கள் அடங்கிய குழு ஒன்றினை உருவாக்க வேண்டும்.
தற்போதுள்ள கோடை காலத்தை பயன்படுத்தி, பருவமழை துவங்குவதற்குள் நீர் நிலைகளை துார்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் வருகின்ற மழைக்காலங்களில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.