ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி, இடையன்குளம் ஊராட்சிகளை ராஜபாளையம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி பொதுமக்கள் சார்பில் வன்னியம்பட்டி விலக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ. மான்ராஜ், ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி உட்பட பலர் பேசினர். ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.