/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்
பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்
பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்
பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 16, 2024 04:31 AM
சிவகாசி: பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சிவகாசியில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வழங்கப்படும் பயிற்க்கு மேலாளர்கள் போர்மேன்களை அனுப்பாத 43 பட்டாசு ஆலைகளுக்கு தலா 5 ஆயிரம் வீதம் விதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துக்கள் நடந்தும் அதை தடுக்க பயிற்சிக்கு செல்லாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பகோட்டை விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் விதி மீறல்களால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் சிவகாசி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 11 பேர் இறந்தனர். மேலும் ஒரு சில பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்தில் பலர் காயமுற்றனர். இவை அனைத்திற்கும் விதி மீறி இயங்கியது காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் போர்மேன்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் வெடி விபத்து ஏற்படுகிறது. எதிர்பாராமல் எப்போதாவது வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான் என்றாலும் மனிதத் தவறுகளால் ஏற்படும் வெடி விபத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தவிர்ப்பதற்காக சிவகாசியில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 ஆலைகளில் பணிபுரியும் மேலாளர்கள், போர்ன்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இங்கு மணி மருந்து கலவை, அறையில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும், பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதில் பயிற்சி பெற்ற போர்மென்கள், மேலாளர்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவர். இந்தப் பயிற்சி வகுப்பிற்கு முதல் முறை வரத் தவறினால் ரூ. 5 ஆயிரம், இரண்டாவது முறை வர தவறினால் ரூ. 10 ஆயிரம் தண்டனை கட்டணமாக சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை அரசு கணக்கில் செலுத்த வேண்டும். மூன்றாவது முறையாக வரத் தவறினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆனாலும் பெரும்பான்மையான பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. இப்பயிற்சியில் பங்கேற்ற இரு மாதங்களில் அழைப்பு அனுப்பபட்ட 43 பட்டாசு ஆலைகளில் இருந்து யாரும் பங்கேற்றவில்லை. கலந்து கொள்ளாத பட்டாசு ஆலைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்தினை தவிர்ப்பதற்காக அரசு முயற்சி மேற்கொண்டாலும் அதனை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. எனவே பயிற்சியில் பட்டாசு ஆலைகளின் போர்மேன்கள், மேலாளர்கள் அலட்சியம் காட்டாமல் பங்கேற்க அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.