ADDED : ஜூன் 01, 2024 04:00 AM
விருதுநகர்: தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் நகரில் நடந்த உலக யோகா போட்டியில் 6 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் விருதுநகர் ஆவல் சூரன்பட்டியை சேர்ந்த கிரிஷா பங்கேற்று பொதுப்பிரிவு, ஆர்த்தி ஸ்டிக் யோகா பிரிவுகளில் 2 தங்கப்பதக்கங்கள், 2 சாம்பியன் கோப்பைகளைவென்றார்.
இப்போட்டியை ஆசிய யோகா சம்மேளனம், ஹத யோகா விஞ்ஞாச தாய்லாந்து அமைப்பு இணைந்து நடத்தியது.
இதில் இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பங்கேற்றனர். தொழிலதிபர் அம்பாள் முத்துமணி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.