Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நிலுவைத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு: மாற்று விவசாயமும் கை கொடுக்காததால் திணறல்

நிலுவைத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு: மாற்று விவசாயமும் கை கொடுக்காததால் திணறல்

நிலுவைத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு: மாற்று விவசாயமும் கை கொடுக்காததால் திணறல்

நிலுவைத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு: மாற்று விவசாயமும் கை கொடுக்காததால் திணறல்

ADDED : ஜூன் 01, 2024 04:01 AM


Google News
ராஜபாளையம்: கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் செலுத்தாமல் ஆலை நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு மாற்றும் விவசாயமும் கை கொடுக்காததால் பரிதவித்து வருகின்றனர்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உள்பட சிவகிரி தாலுகா உள்ளடங்கிய விருதுநகர், தென்காசி மாவட்ட கரும்பு விவசாயிகளின் 2018-- 19 ம் ஆண்டிற்கான தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பியதில் வட்டியுடன் நிலுவைத் தொகை ரூ.30 கோடி இதுவரை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், தேவதானம் பகுதிகளில் நீர் வரத்து காரணமாக நெல் விவசாயத்தை அடுத்து கரும்பு சாகுபடி அதிகம். பாரம்பரியமாக கரும்பு சாகுபடி செய்து வெல்லமாக மாற்றி கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் வியாபாரம் நடந்து வந்தது.

இந்நிலையில் விருதுநகர், தென்காசி மாவட்டத்தை ஒட்டி தனியார் சர்க்கரை ஆலை தொடங்கியதால் கரும்பு விவசாய பகுதி ஊக்குவிக்கப்பட்டு ஆலை நிர்வாகத்திற்கு இடையே ஒப்பந்தம் மூலம் வங்கிகளிடம் கடன் பெற்று விவசாயம் நடந்து வந்தது.

இதில் 2018--19 ல் கரும்பு சப்ளை செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டு மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை தற்போது வரை ரூ. 30 கோடி வட்டியுடன் பட்டுவாடா சர்க்கரை ஆலை தரப்பு நிலுவையில் வைத்துள்ளது.

இதனால் அடுத்த கட்ட விவசாய பணிகளுக்கான செலவுகளை வங்கி மூலம் பெற முடியாமலும் ஓரளவுக்கு மேல் வெளியில் கடன் பெற முடியாத சூழ்நிலையும் தவிர்த்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருப்பினும் சர்க்கரை ஆலை இயங்காமல் உள்ளதால் வேறு வழி இன்றி சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு இடையே விவசாயிகள் கரும்பினை அனுப்பி வருகின்றனர்.

கரும்பு சாகுபடி பரப்பு 60 சதம் குறைந்துள்ள நிலையில் மாற்று விவசாயத்திற்கான வழிமுறை கை கொடுக்காமலும், பல்வேறு கட்ட போராட்டங்களும் கோரிக்கைகள் வைத்தும் நிலுவைத் தொகை பெற முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நிலுவை தொகை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us