/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'டிஜிட்டல் லிட்டெரெஸி' பஸ் சேவை துவக்கம் 'டிஜிட்டல் லிட்டெரெஸி' பஸ் சேவை துவக்கம்
'டிஜிட்டல் லிட்டெரெஸி' பஸ் சேவை துவக்கம்
'டிஜிட்டல் லிட்டெரெஸி' பஸ் சேவை துவக்கம்
'டிஜிட்டல் லிட்டெரெஸி' பஸ் சேவை துவக்கம்
ADDED : ஜூன் 01, 2024 04:00 AM
விருதுநகர்: விருதுநகரில் அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெற 'டிஜிட்டல் லிட்டெரெஸி' தொடர்பான பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, ரெடிங்க்டன் பவுண்டேசன், லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், மக்கள் பயன்பெறும் 'டிஜிட்டல் லிட்டெரெஸி'தொடர்பான பஸ் சேவையை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசியதாவது:
மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் 5 முதல் 9ம் வகுப்பு, ப்ளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணினி பற்றிய அடிப்படை, மெயில் உருவாக்குவது, கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்பாகவும், மக்களுக்கு ஆதார், பான், டிஜிட்டல் பண பரிவர்தனை தொடர்பாக தெரிந்து கொள்ள 'டிஜிட்டல் லிட்டெரெஸி' என்ற இந்த இலவச பயிற்சி துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வழங்கப்படும் பஸ்சினுள் வழங்கப்படுகிறது.
இந்த பஸ் மாவட்டம் முழுவதும் 5 ஆண்டுக்கு தொடர்ந்து இயக்கப்பட்டு சேவைகள் வழங்கும்.
2024-25ம் ஆண்டில் சிவகாசி, வெம்பக்கோட்டை வட்டாரத்திலும், 2025-26 விருதுநகர், சாத்தூர், 2026---27 ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராஜபாளையம், 2027-28 அருப்புக்கோட்டை, நரிக்குடி, 2028-29 காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் பயிற்சி அளிக்கிறது, என்றார்.