/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டுப்போன பனை மரங்களால் சாத்துாரில் விபத்து அபாயம் பட்டுப்போன பனை மரங்களால் சாத்துாரில் விபத்து அபாயம்
பட்டுப்போன பனை மரங்களால் சாத்துாரில் விபத்து அபாயம்
பட்டுப்போன பனை மரங்களால் சாத்துாரில் விபத்து அபாயம்
பட்டுப்போன பனை மரங்களால் சாத்துாரில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 08, 2024 05:43 AM

சாத்துார் : சாத்துார் நீராவி பட்டி ரோட்டில் பட்டு போன பனை மரங்களால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
சாத்துாரில் இருந்து நீராவிப்பட்டி செல்லும் ரோடு பெரிய கொல்லப்பட்டி கண்மாய் கரையின் அருகில் உள்ளது. இந்தக் கண்மாய் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.
கண்மாயின் கரையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரங்கள் வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அவற்றில் பல மரங்கள் தானாக பட்டு போன நிலையில் கீற்றுகள் இன்றி காணப்படுகிறது.
இந்த கண்மாய் கரையின் ஓரத்தில் அமைந்துள்ள ரோடு வழியாகவே நீராவிபட்டி, போத்திரெட்டிபட்டி வன்னிமடை உப்பத்துாருக்கு பலர் சென்று வருகின்றனர்.
மேலும் பல பட்டுப்போன பனை மரங்கள் கரையில் இப்போ விழுமோ எப்போ விழுமோ என்று இருக்கும் நிலையில் உள்ளது. தற்போது பலத்த காற்றுடன் கோடை மழை திடீரென பெய்து வரும் நிலையில் பட்டுப்போன மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தால் வாகனத்தில் செல்பவர்கள் பலத்த காயம் அடைவதோடு உயிர் பலியாகும் நிலை உள்ளது. உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கொல்லப்பட்டி கண்மாயின் கரையில் காணப்படும் பட்டுப்போன பயன் இல்லாத பனை மரங்களை வெட்டி அகற்ற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.