/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்! மழை நேரங்களில் கவனமாக செயல்படுவதும்மின் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்! மழை நேரங்களில் கவனமாக செயல்படுவதும்
மின் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்! மழை நேரங்களில் கவனமாக செயல்படுவதும்
மின் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்! மழை நேரங்களில் கவனமாக செயல்படுவதும்
மின் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்! மழை நேரங்களில் கவனமாக செயல்படுவதும்
ADDED : ஜூன் 08, 2024 05:43 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மின் விபத்துக்களை தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவதும், மழை நேரங்களில் மின்கம்பங்கள், சாய்ந்தாலோ, வயர் அறுந்து விழுந்தாலோ மின்வாரியத்தில் புகார் அளித்து விட்டு ஊழியர்கள் வரும் வரை பிறர் தொடாமல் தடுக்கும் வகையில் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழையாக பெய்து வருகிறது. பிளஸ் டூ பொதுத்தேர்வு, 2024 லோக்சபா தேர்தல் காரணமாக 3 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை.
மேலும் கோடை மழையால் மரங்கள் வளர்ந்து வயர்களை உரசி வருகின்றன. இதனால் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக மின் ஊழியர்கள் அப்பகுதிகளில் உள்ள வயரை உரசும் அனைத்து மரக்கிளைகளையும் அகற்றிவிட்டு மின் வினியோகம் அளித்து வந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக காற்றும், மின்னலும் அதிகம் இந்த மழையின் போது வருவதால் மின்கம்பங்கள் சரிவதும், வயர் அறுந்து விழுவதும் அதிகரித்து வருகிறது. இது பராமரிப்பு பணி நடக்காமல் மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற நேரங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஜூன் 2ல் சாத்துாரில் வாலிபர் ஒருவர் அறுந்து கிடந்த வயரால் பலியானார். ஜூன் 4ல் திருச்சுழி மறவர்பெருங்குடியில் ரோட்டில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து இறந்தார். அவரை துாக்க சென்ற பாட்டியும் படுகாயமடைந்தார். இது போன்ற விபரீத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று முன்தினம் வச்சக்காரப்பட்டியில் நான்கு மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இது போன்ற அசாதாரண சூழல்களில் மக்கள் மின்வாரியத்தை தொடர்பு கொண்டோ அல்லது உள்ளூரில் உள்ள மின் ஊழியரை அணுகி புகாரை தெரிவிக்க வேண்டும்.
ஆனால் பலர் இதை செய்யாமல் தான்தோன்றி தனமாக வயர்களில் கை வைக்கின்றனர். இதுவே மின்விபத்துக்கு மூல காரணமாகிறது. மேலும் கிராம பகுதிகளில் மின்னகம் தொடர்பான புகார் எண்களை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் மேற்பார்வை பொறியாளர் லதா கூறியதாவது:
காற்று, மழைக்காலங்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் வயர்கள், பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். இவற்றின் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் கட்டாயம் செல்லக்கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதை தொட முயற்சிப்பதோ கூடாது.
அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த வயர்களை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும். புகார்கள், இடர்பாடுகளின் போது அவசர கால உதவிக்கு மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.