/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நெல் கொள்முதல் நிலையம் மம்சாபுரத்தில் திறப்பு நெல் கொள்முதல் நிலையம் மம்சாபுரத்தில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் மம்சாபுரத்தில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் மம்சாபுரத்தில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் மம்சாபுரத்தில் திறப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:42 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான மம்சாபுரத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மம்சாபுரம் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் நேற்று நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நெல் களத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி, தென்னை விவசாயம் சங்க தலைவர் முத்தையா, நிர்வாகி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு முதல் முறையாக மம்சாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நெல் விவசாயிகள் தெரிவித்தனர்.