Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

ADDED : ஆக 04, 2024 07:07 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் புளிய மரத்தில் கார் மோதியதில் ஆசிரியர் பாலமுருகன் 43, உட்பட 4 பேர் பலியாயினர்.

அருப்புக்கோட்டை அருகே கீழ முடிமன்னார்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் .

புளிச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் கலைக்குழுவும் நடத்தி வந்துள்ளார். நேற்று இவர் தனது கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் மணி 18, ஆலடிப்பட்டி சின்னத்துரை 22 ,

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராஹிக் 20, ஆகியோருடன் காரில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை ஆசிரியர் ஓட்டினார்.

மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

எம்.ரெட்டியபட்டி போலீசார் , தீயணைப்பு துறையினர்

இடுபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us