Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவியும் பக்தர்கள்; தாமதமாக வந்தவர்கள் போராட்டம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவியும் பக்தர்கள்; தாமதமாக வந்தவர்கள் போராட்டம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவியும் பக்தர்கள்; தாமதமாக வந்தவர்கள் போராட்டம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவியும் பக்தர்கள்; தாமதமாக வந்தவர்கள் போராட்டம்

ADDED : ஆக 04, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
வத்திராயிருப்பு:

இன்று (ஆக.,4) ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம்கோயிலில் ஆடிப்பெருக்குநாளான நேற்று மதியம் 2:00 மணி வரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறிய நிலையில், அதன் பின்பும் வந்த ஆயிரக்கணக்கானோர் மலை ஏற அனுமதிக்கப்படாததால் வனத்துறை கேட் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக. 1 முதல் 5 வரை 5 நாட்கள் தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் ஆடிப்பெருக்கு நாளான நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணியை கடந்தும் பக்தர்கள் வந்த நிலையில் 2:00 மணி வரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலை ஏறினர். இதனையடுத்து வனத்துறை கேட் மூடப்பட்டது.

போராட்டம்


ஆனாலும் தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி இருந்ததால் மாலை 4:30 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வனத்துறை கேட் முன் குவிந்தனர். ஆனால் அவர்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. தங்களை மலை ஏற அனுமதிக்க வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மலை ஏறுவதை தடுக்கும் விதத்தில் பேரிக்காடுகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் பலர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்றவர்கள் அடிவாரத்திலேயே காத்திருந்தனர்.

இதற்கிடையில் காலை8:00 மணி முதல் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலை ஏறிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம்திரும்பினர்.

மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us