/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட் குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்
குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்
குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்
குரூப் 4 தேர்வில் 14,477 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூன் 10, 2024 05:55 AM

விருதுநகர் ' விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 14 ஆயிரத்து 477 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுத அருப்புக்கோட்டை 9999, விருதுநகர் 10,751, காரியப்பட்டி 3782, திருச்சுழி 1790, சாத்துார் 6109, வெம்பக்கோட்டை 1789, சிவகாசி 12,046, ராஜபாளையம் 12,961, ஸ்ரீவில்லிப்புத்துார் 8526, வத்தராயிருப்பு 3620 என மொத்தம் 71 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 291 மையங்களில் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 56 ஆயிரத்து 896 பேர் பங்கேற்றனர். இதில் 14 ஆயிரத்து 477 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
விருதுநகரில் வே.வ.வன்னியபெருமாள் கலைக்கல்லுாரி தேர்வு மையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.