/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வட்டார கல்வி அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அல்லல் வட்டார கல்வி அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அல்லல்
வட்டார கல்வி அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அல்லல்
வட்டார கல்வி அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அல்லல்
வட்டார கல்வி அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் அல்லல்
ADDED : ஜூன் 10, 2024 05:51 AM

காரியாபட்டி : காரியாபட்டி பி.இ.ஓ., எனும் வட்டார கல்வி அலுவலகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அலுவலர்கள், ஆசிரியர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டியில் பி.இ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ரோட்டின் மட்டத்திலிருந்து அலுவலக கட்டடம் பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் மழை நீர் அலுவலகத்தை சுற்றி நிற்பதால், வெளியேற வழி இல்லை. மேலும் அருகில் பேரூராட்சி மேல்நிலை தொட்டி உள்ளது. அது நிறைந்தும் அந்த தண்ணீரும் இதில் தேங்குகிறது. நாள் கணக்கில் தேங்குவதால் கொசு உற்பத்தியாகிறது. பல்வேறு தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. அலுவலர்கள் ஆசிரியர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு வழங்கும் பாட புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆசிரியர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல, பி.இ.ஓ., அலுவலகத்திற்கு வர வேண்டி உள்ளது.
மழைநீர் தேங்கி நிற்பதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு அலுவலகத்திற்குள் இருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் தேங்காமல் இருக்க கிராவல் மண் மேவி, பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.