/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண்டல விளையாட்டுப் போட்டி; சூர்யா பாலிடெக்னிக் முதலிடம்மண்டல விளையாட்டுப் போட்டி; சூர்யா பாலிடெக்னிக் முதலிடம்
மண்டல விளையாட்டுப் போட்டி; சூர்யா பாலிடெக்னிக் முதலிடம்
மண்டல விளையாட்டுப் போட்டி; சூர்யா பாலிடெக்னிக் முதலிடம்
மண்டல விளையாட்டுப் போட்டி; சூர்யா பாலிடெக்னிக் முதலிடம்
ADDED : பிப் 23, 2024 10:24 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நாகப்பட்டினம் - புதுச்சேரி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது. போட்டியை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
போட்டியில் பங்கேற்ற சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவிகள் பிரிவுக்கான எறி பந்து போட்டியில் முதலிடத்தையும், ஆண்கள் பிரிவில் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும், கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் அருண்குமார், கல்லுாரி துறைத் தலைவர்கள், போராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.