ADDED : செப் 10, 2025 11:05 PM
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சி. மெய்யூர் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அழகுநாதன் மகன் கனகராஜ்,21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.