/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : செப் 10, 2025 11:05 PM
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய, 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு சி.மெய்யூர் கிராமத்தில் தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும், அவற்றை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.
போலீசார் 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.